அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

By Raghupati RFirst Published Dec 25, 2022, 6:11 PM IST
Highlights

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

அப்போது பேசிய அவர், தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின்  பொறுப்பேற்றவுடன் வெளிப்படை தன்மையோடு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொருளாதாரத்தை சீரழித்து உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தற்போது சீராகி வரும் நிலையில், இனிவரும் காலங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை  உயர்த்துவார். பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

எனவே தமிழக முதல்வர் நிதிநிலை சீரானதும் அனைவரின் வேண்டுகோளையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!

click me!