கோவையில் செயற்கை ஓடுபாதை அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி

By Velmurugan s  |  First Published Dec 25, 2022, 4:25 PM IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.6.55 கோடி  மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும் ரூ.65.15 இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 


கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.6.55கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும் ரூ.65.15இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகளுக்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  V செந்தில்பாலாஜி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,  அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப.கார்த்திக்கேயன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி  மேயர் கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்  மு.பிரதாப், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Latest Videos

அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற  விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

click me!