உதயநிதிக்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் பலி

Published : Dec 25, 2022, 03:58 PM IST
உதயநிதிக்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் பலி

சுருக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக நடப்பட்டிருந்த கட்சி கொடி கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது அமைச்சரை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறங்களிலும் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் - பிரதமர் மோடி உரை

உயதயநிதி சென்ற பின்னர் சாலையின் இரு புறங்களிலும் நடப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பத்தை அகற்றிக் கொண்டிருந்த வீரமலை என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் வீரமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கியை எடுக்கவும் தயங்க வேண்டாம்; காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை

இது தொடர்பாக தகவல் அறிந்த காலைக்குடி வடக்கு காவல்நிலைய காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை