எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போட்ட மர்ம நபர்கள்! கொந்தளிக்கும் செங்கல்பட்டு அதிமுக தொண்டர்கள் !

Published : Sep 28, 2023, 03:39 PM ISTUpdated : Sep 28, 2023, 03:51 PM IST
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போட்ட மர்ம நபர்கள்! கொந்தளிக்கும் செங்கல்பட்டு அதிமுக தொண்டர்கள் !

சுருக்கம்

பாஜக - அதிமுக கூட்டணி உடைந்திருக்கும் நிலையில் இந்த விஷமச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று உடனடியாகத் தெரியவரவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு போட்டுச் சென்றுள்ளனர். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி அதிமுகவினர் காவித்துண்டு போர்த்திய நபர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள ரவுண்டானாவில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இன்று இந்தச் சிலை மீது காவித்துண்டு அணிவிக்கப்பட்டிருந்த கட்சி அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், காவித்துண்டுடன் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலையைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக சிலை மீது இருந்த துண்டை அகற்றினர். பாஜக - அதிமுக கூட்டணி உடைந்திருக்கும் நிலையில் இந்த விஷமச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று உடனடியாகத் தெரியவரவில்லை.

375 வருடமாக கடலுக்கு அடியில் காணாமல் போயிருந்த 8வது கண்டம் கண்டுபிடிப்பு!

இதனால், இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டித்து அதிமுகவினர் சிறிது நேரம் அப்பகுதியில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்துவதாகக் கூனி அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக வைத்தனர்.

அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி, இனி எந்தச் சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்றும் உறுதிபடத்  தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப், மெசெஞ்சரில் ChatGPT போன்ற வசதி! மெட்டா கனெக்ட் மாநாட்டில் ஜூக்கர்பெர்க் சொன்ன குட் நியூஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!