சுதீஷின் மனைவியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி.. இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

By vinoth kumar  |  First Published Feb 22, 2024, 10:16 AM IST

லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி  வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.


தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி  வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இங்கு 78 வீடுகளை மறைந்த விஜயகாந்தின் மைத்துனர் சுதிஷின் மனைவி பல கோடி கொடுத்து சந்தோஷ் சர்மாவிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் கோர விபத்து.. 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. நடந்தது என்ன?

ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் பில்டர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:  Today Gold Rate in Chennai: அடேங்கப்பா! ஒரே நாளில் தங்கம் எவ்வளவு குறைஞ்சிருச்சா! வாங்க இதுதான் சரியான நேரம்!

click me!