ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Feb 22, 2024, 6:39 AM IST

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியை சேர்ந்த பவித்ரா(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று தம்மம்பட்டியில் செல்வகுமார் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜேசிபி வாகனம் மீது ஆம்னி கார் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வளைகாப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியை சேர்ந்த பவித்ரா(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று தம்மம்பட்டியில் செல்வகுமார் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

பின்னர் அங்கிருந்து கர்ப்பிணி பெண் பவித்ராவை, அவரது தந்தை பாலுசாமி, தாய் மற்றும் கணவர் ஆம்னி காரில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடிக்கு அழைத்து வந்துள்ளனர். ஆம்னி வேனை பவித்ராவின் தந்தை பாலுசாமி ஓட்டி வந்துள்ளார். சேந்தமங்கலம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்ற ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரின் தந்தை பாலுசாமி, தாய், கணவர் செல்வகுமார் உள்ளிட்ட 4 பேர் படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு காரில் வந்துக்கொண்டிருந்த போது 9 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!