ராசிபுரம் அருகே அதிகாலை நடந்த கோர விபத்து.. கம்பிவேலியில் கார் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி பலி..!

By vinoth kumar  |  First Published Nov 5, 2023, 11:35 AM IST

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோளப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகே உள்ள கம்பிவேலியில் போலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. 


ராசிபுரம் அருகே இன்று அதிகாலை பொலிரோ கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வனசரக ரேஞ்சர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமாரியை சேர்ந்த பிரபல மரம் வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் கொல்லிமலையை சேர்ந்த இடைதரகர் செல்வகுமார், கொல்லிமலை வனசரக ரேஞ்சர் ரகுநாதன் உட்பட 3 பேர் நேற்று கொல்லிமலையில் இருந்து மரம் வெட்டி வியாபாரம் செய்ய கட்டிங் மிஷின் வாங்க சேலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோளப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகே உள்ள கம்பிவேலியில் போலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

இந்த கோர விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  அவனுங்கள செருப்பால அடிக்கணும்! நாய் என்று சொல்லி பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது.!

கொல்லிமலை வன சரக பகுதியில் ஏற்கனவே முறைகேடாக மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மரம் வெட்ட உறுதுணையாக கொல்லிமலை  வனத்துறை ரேஞ்சர் ரகுநாதன் உடந்தையாக இருந்தாரா? என்ற கோணத்திலும் வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருந்தால் இது யாருக்கு தர கொண்டு வரப்பட்ட பணம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. 

click me!