நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு; 20 பேருக்கு உடல்நலக் குறைவு!

By SG Balan  |  First Published Sep 18, 2023, 4:01 PM IST

சிறுமி மரணத்தைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 20 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் சனிக்கிழமை இரவு 14 வயது சிறுமி கலையரசி ஷவர்மா சாப்பிட்டுள்ளார். சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த தவக்குமாரின் மகளான அவர் குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

மறுநாள் காலையில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இன்று (திங்ட்கிழமை) காலையில் சிறுமி கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேருக்கு இதே உணவகத்தில் ட்ரீட் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கும் இன்று காலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த உணவகத்தில் கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஷவர்மா செய்வதற்கான இயந்திரமும் அசுத்தமாக இருந்துள்ளது.

இதனால் ஆட்சியர் உமா உடனடியாக உணவகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்து உணவுப் பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

click me!