சுத்துபோட்ட லஞ்ச ஒழிப்புத்துறை! வேறு வழியில்லாமல் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற எஸ்ஐ!

By vinoth kumar  |  First Published Sep 16, 2023, 3:38 PM IST

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் காவல் உதவி ஆய்வாளர் அழைத்துள்ளார். கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஒருவழியாக பேசி ரூ.7000 கொடுப்பதாக இறுதி செய்யப்பட்டது. 


விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.7000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்ததை அடுத்து அவரை கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் இருசக்கர வாகனத்தில் ஈரோடு வந்த போது மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் காவல் உதவி ஆய்வாளர் அழைத்துள்ளார். கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஒருவழியாக பேசி ரூ.7000 கொடுப்பதாக இறுதி செய்யப்பட்டது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- காதலியின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலன்! நடந்தது என்ன?

மேலும் பிரகாஷிடம் இருந்த ரூ.2000 முதலில் செல்வகுமார் பெற்று கொண்டுள்ளார். இன்னும் ரூ.5000 கொண்டு வந்து கொடுத்தால் வாகனத்தை விடுவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் பிரகாஷ் புகார் அளித்தார். 

இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்! தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி! கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

இதனையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து எஸ்எஸ்ஐ செல்வகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரை பார்த்த எஸ்எஸ்ஐ செல்வகுமார் வாங்கிய பணத்தை உடனடியாக வாயில் போட்டு மென்று மறைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!