சலுகை விலையில் வழங்கப்பட்ட பள்ளிப்பாளையம் சிக்கன் பிரியாணி ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

By Velmurugan sFirst Published Sep 14, 2023, 6:11 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு ஆபர் விலையில் சிக்கன்  பிரியாணி வழங்கப்பட்டதால் இரவு வரை  குவிந்த பொதுமக்கள் சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேலம் சாலையில் இன்று  புதியதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஒரு நாள் மட்டும் 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மதியம் முதலே ஏராளமான பொதுமக்கள் சிக்கன் பிரியாணியை வாங்க குவிந்த நிலையில், பிரியாணி கிடைக்காதவர்களுக்கு மாலையில் பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, சுமார் 1000 நபர்களுக்கு வழங்கும் வகையில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. 

காவிரி விவகாரம்; முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியம் - வேடிக்கை பார்த்த போலீஸ்

இந்நிலையில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிக்கன் பிரியாணி தீரும் நிலையில் இருந்ததால் ஒருவர்க்கு ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு பிரியாணியை வாங்கிச் செல்ல முயன்றனர்.  இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்து மதத்தை எதிர்க்கவில்லை; சனாதன தர்மத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம் - அமைச்சர் தகவல்

இதனிடையே சிக்கன் பிரியாணி இல்லை என கடை உரிமையாளர் கூறியதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும்  தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த கடையின் திறப்பு விழா நாளில், சலுகை விலையில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என ஆசையோடு வந்திருந்த பொது மக்களின் பெரும்பாலானோர் சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

click me!