திருவண்ணாமலையில் கோர விபத்து.. 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. நடந்தது என்ன?

Published : Feb 22, 2024, 08:41 AM ISTUpdated : Feb 22, 2024, 08:50 AM IST
திருவண்ணாமலையில் கோர விபத்து.. 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. நடந்தது என்ன?

சுருக்கம்

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதையும் படிங்க: ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 9 பேர் உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.. நடந்தது என்ன?

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விவரத்தையும், எங்கு செல்லும் போது விபத்து நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?