திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் தாமாக சென்று மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான கோரிக்கை மனுவினை அளித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திலேயே நேரில் சென்று அவர்களுடைய கோரிக்கையை கேட்டு அறிந்தார். பின்னர் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.
undefined
பின்னர் பொதுமக்களிடம் பெரும் கோரிக்கை மனுக்களின் மீது மாவட்ட தலைவர் பொதுமக்களின் நலன் கருதி மனுக்கள் பெறும் இடங்களில் பொதுமக்கள் நாற்காலியில் அமர வைத்து மனுக்களை பதிவு செய்யவும் மற்றும் பதிவு செய்யப்பட்ட மனுக்கள் மீது குறைதீர்க்க கூட்டத்தில் மனுதாரர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த இருக்கையிலேயே அதற்கு தகுந்த துறை சார்ந்த அலுவலர்கள் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதனை மாவட்ட ஆட்சியர் இடத்திலேயே மனுதாரர்களுடன் அலுவலர்களும் சேர்ந்து எடுத்துரைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்? படுகாயத்துடன் இளம்பெண்ணுக்கு சிகிச்சை
பின்னர் மனுதாரர்களிடம் மாவட்ட ஆட்சியர் தன் கையை கட்டிக்கொண்டு அவர்களுடைய கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு அறிந்து விரைவில் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் கூறினார். மேலும் மனுக்களை பதிவு செய்யப்பட்ட இடத்திலேயே சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்களை பெற்றுக் கொண்டார் அப்பொழுது பதிவு செய்யும் இடத்தில் சென்று பொது மக்களிடம் மனுக்களை பெற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவரையும் நாற்காலியில் அமர வைத்ததற்காக பாராட்டி வருகின்றனர்.