பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு; வீடியோ வெளியாகி பரபரப்பு

Published : Dec 25, 2023, 01:07 PM IST
பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு; வீடியோ வெளியாகி பரபரப்பு

சுருக்கம்

திருவண்ணாமலையில் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பெட்ரோல் பங்கில் தினமும் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனம் என அனைவரும் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். இதற்கு பணம் தராமல் தகராறு செய்ததால் இதனை பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமன் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்காக பெட்ரோல் பங்க் மேலாளருக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் புதியவகை கொரோனா பரவல்; தடுப்பூசி அவசியமா? மத்திய அரசு விளக்கம்

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற இளைஞர்கள் மேலும் மூன்று இளைஞர்களை உடன் அழைத்து வந்து மீண்டும் பெட்ரோல் பங்கில் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு முற்றியதால் பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமனை தகாத வார்த்தைகளால் பேசி சர்வ மாதிரியாக இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மேலாளரை கத்தியால் வெட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகியுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வரவேற்று புதுவையில் கரன்சி குடில்; ரூபாய் நோட்டில் வடிவமைத்து அசத்தல்

இது தொடர்பாக வடஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (வயது 21), தருண்(22), மற்றும் பார்த்திபன் (23) ஆகிய மூன்று இளைஞர்களை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?