சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

By Raghupati R  |  First Published Aug 29, 2022, 6:47 PM IST

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தமிழ்நாட்டின் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது.அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.  

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?

அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டது. இதில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக, இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவியர்களின்‌ விவரங்களை 25.06.2022 முதல்‌ 30.06.2022க்குள்‌ சிறப்பு முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில்‌ பதிவிடப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

பின்னர் ஜூலை 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும்‌ மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள்‌, வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌ மற்றும்‌ பயின்ற அரசு பள்ளி விவரங்கள்‌ பெறப்பட்டு வந்தது.தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அநேகமாக அது செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழாவில் இத்திட்டம் துவங்கி வைக்க உள்ளதாகவும், இவ்விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!