கோவை வெள்ளலூர் பஸ் நிலையம் இட மாற்றமா? அ.தி.மு.க திடீர் போராட்டம்.. பல்டி அடித்த மாநகராட்சி

By Ajmal KhanFirst Published Aug 29, 2022, 5:11 PM IST
Highlights

வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை கைவிட கூடாது என கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போதைக்கு வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றுவதாக முடிவெடுக்கவில்லை என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார். 

அதிமுக போராட்டம்

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.  இதனையடுத்து கோவை  மாமன்ற கூட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை கேட்ட பிறகு இடமாற்றம் செய்வது குறித்து  முடிவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். எனவே இன்று நடைபெற்ற மாநகராட்சி  கூட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்றம் குறித்து ஏதேனும் தீர்மானமோ அல்லது தகவல்களோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முன்னதாக பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும் அப்பணிகளை கைவிட கூடாது என வலியுறுத்திஅதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ்  கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்கள், வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் எதனால் கைவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினார். திமுக அரசின் நடவடிக்கை காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிங்க...! சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி


மாநகராட்சி விளக்கம்

மேலும் கோவை மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,  உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.  இதனையடுத்து கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில்  நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் மாநகராட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் பதிலளித்தனர். அப்போது வெள்ளலூர் பேருந்து நிலையம் இடம் மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு  மாநகராட்சி ஆணையர் பிரதாப் பதில் அளித்தார். மத்திய அரசின் ‘ரைட்ஸ்’ என்ற அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். அந்த அமைப்பு இதற்கான அறிக்கையை மாநகராட்சியிடம் தருவார்கள்.தற்போது வரை வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ரைட்ஸ்சின் அறிக்கை வந்தவுடன் தான் முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அதிகரித்துள்ள ரவுடிகள் தொல்லை...! தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் மறுப்பு

 

click me!