தங்கச்சி பொண்ணு திருமணத்துக்கு சென்றபோது சோகம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உடல் நசுங்கி பலி..!

Published : Aug 29, 2022, 02:28 PM ISTUpdated : Aug 29, 2022, 02:31 PM IST
தங்கச்சி பொண்ணு திருமணத்துக்கு சென்றபோது சோகம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உடல் நசுங்கி பலி..!

சுருக்கம்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற பெண் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற பெண் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.லட்சுமிநாராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மனைவி பேபி சாந்தி (52). இவர், செங்கல்பட்டியில் நடைபெற உள்ள தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலமாக செல்ல கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க;- ஒன்ஸ்மோர் கேட்டு பேராசிரியர் அடம்! நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு தடவைதான்!ஒரு நாள் முழுவதும் இல்லை கூறிய பெண்

அப்போது அங்கு வந்த நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பு பதிவு இல்லாத பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் தவறுதலாக ஏறியுள்ளார். இதையடுத்து, பேபி சாந்தி ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது ரயில் புறப்பட்டு விட்டதால் பேபி சாந்தி தடுமாறி ரயில் தண்டவளாத்தில் விழுந்துள்ளார்.

அங்கு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் முடியாமல் போனது. ரயிலில் அடியில் சிக்கி ரத்த வெள்ளத்தில் அந்தத பெண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பேபி சாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  என்னுடைய காதலை பிரேக் அப் செஞ்சுட்டு.. நீ சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடுறியா.. காதலியின் மண்டையை உடைத்த காதலன்

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!