கோவில்பட்டியில் பெய்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதில், பள்ளி வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுதால் குழந்தைகள் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை தேங்கியது. இந்நிலையில், இளையரசனேந்தல் சாலை, ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக மழை நீரில் சிக்கிக்கொண்டது.
undefined
இதையும் படிங்க;- நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு.. 2 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி.. ஒரு பெண்ணுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.!
குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் முன்னும், பின்னும் நகரமுடியாமல் அப்படியே நின்றது. இதனால், குழந்தைகள் வெளியே வர முடியாமல் அழுது கதறினர். அந்த குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர். 7 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்று சம்பவங்கள் நிகழ்வதாகவும், இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க;- பெரியார் சிலை பற்றி சர்ச்சை பேச்சு... கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி!!