தமிழகத்தில் அதிகரித்துள்ள ரவுடிகள் தொல்லை...! தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் மறுப்பு

By Ajmal KhanFirst Published Aug 29, 2022, 4:32 PM IST
Highlights

தமிழகத்தில் மாவட்டம் தோறும் ரவுடிகளுக்கான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தக்கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
 

ரவுடிகளுக்கு தனி நீதிமன்றம்

தமிழகத்தில் ரவுடிகள் தொல்லையும், ரவுடிகளும் அதிகரித்து விட்டனர், அவர்களை அடக்க உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குனருக்கு  உத்தரவிட வேண்டும். அதேபோல் ரவுடிகள் மீதான  வழக்குகளை விசாரிக்க உரிய தனி நீதிமன்றங்களை மாவட்டம்தோறும் அமைக்க வேண்டும் எனக்கோரி  மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.ஏற்கனவே இந்த விவகாரத்தை கையாள பல்வேறு சட்டப்பிரிவுகளும், நீதிமன்றங்களும் உள்ளதால் இந்த தனி நீதிமன்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்

அந்த உத்தரவை எதிர்த்து கே.கே.ரமேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செயப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா , சுதான்ஷு துலியா அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே மாவட்டம் தோறும் விசாரணை நீதிமன்றங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற கோரிக்கை வேடிக்கையாக உள்ளது, எனவே தமிழகத்தில் மாவட்டம் தோறும் ரவுடிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கூடிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்

மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை...! நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

click me!