தடையில்லாமல் மின்சாரம் வழங்குவது குறித்து அக்.10 ஆய்வுக்கூட்டம்... அறிவித்தார் செந்தில் பாலாஜி!!

By Narendran SFirst Published Oct 7, 2022, 9:48 PM IST
Highlights

தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின்சாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின்சாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி  ஆய்வுக்கூட்டம் நடைப்பெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி... கால்தவறி தண்டவாளத்தில் விழுந்த திருடன்... அடுத்து நிகழ்ந்தது என்ன?

மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சென்னையில் 9500 கிலோ மீட்டர் அளவில் கம்பிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 2400 பில்லர்கள் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க: கழிவறையில் வீசப்பட்ட குழந்தை... தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!!

மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில், பூமி கம்பிகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, இறுதிக்கட்டத்தில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும். அதேப்போல், மின்னகத்தில் ஒரே நேரத்தில் தற்போது 60 அழைப்புகள் பேசக்கூடிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிக அழைப்புகள் வரும் என்பதால் அதனை 75 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

click me!