
இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை அமலுக்கு வந்தது. இதே போல் ஜியோ நிறுவனம் தீபாவளிக்குள் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி, இன்று சென்னையிலும், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நாத்துரவாராவிலும் ஜியோ 5ஜி (Jio True 5G) சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்திலும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி வைஃபை சேவைகள் வழங்கப்பட உள்ளன.
ராஜஸ்தானில் இன்று ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை அறிமுக விழாவில், ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கலந்துகொண்டார். ‘அப்போது அவர் பேசியதாவது: 5G என்பது குறிப்பிட்ட தரப்பினருக்கோ, குறிப்பிட்ட பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கோ கிடையாது. அது நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு தொழில்துறைக்கும் கிடைக்க வேண்டும்.
மேலும் படிக்க:எந்தெந்த பிளான்களில் Jio 5G கிடைக்கும்? இதோ 5ஜி அப்டேட்..!
அந்தவகையில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள JioTrue5G ஆனது ஒவ்வொரு இந்தியரும் 5ஜி சேவையை பெறுவதற்கான முன்னெடுப்பாகும். ஜியோவின் வெல்கம் ஆஃபரில் புதிதாக சென்னை நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை நகரவாசிகள் அழைப்பு முறையில் ஜியோவின் 5ஜி சேவைகளை அனுபவிக்கலாம்’ என்று பேசினார்.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அழைப்பு முறையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையிலும் இதே போல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை பெறுவதற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் 5ஜி சேவையைப் பெறலாம். இதற்காக 5ஜி சிம் எதுவும் வாங்கத் தேவையில்லை. 5ஜி ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று 5ஜி ஆப்ஷனை ஆன் செய்தாலே போதும். 4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவையை அனுபவிக்கலாம். அதுவும் 1 Gbps வேகத்தில், இலவசமாகப் பெறலாம்.
மேலும் படிக்க:ISRO LVM3-M2: 36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: முழுவர்த்தக ரீதியாக முதல் பயணம்