கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் மனைவி தற்கொலை.. வேதனையில் கணவர் எடுத்த விபரீத முடிவு..!

By vinoth kumar  |  First Published Oct 22, 2022, 2:04 PM IST

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (26), வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர், தனது தாய் மாமன் மகள் எர்ணாவூரை சேர்ந்த முண்டீஸ்வரியை (21) கடந்த மாதம் 12ம் தேதி திருமணம் செய்தார். இருவரும் தேனிலவுக்கு சென்றுவிட்டு கடந்த 14ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளனர்.

சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில்  மனைவி தற்கொலை செய்து கொண்டதால் துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (26), வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர், தனது தாய் மாமன் மகள் எர்ணாவூரை சேர்ந்த முண்டீஸ்வரியை (21) கடந்த மாதம் 12ம் தேதி திருமணம் செய்தார். இருவரும் தேனிலவுக்கு சென்றுவிட்டு கடந்த 14ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

கடந்த 15ம் தேதி சாமுண்டீஸ்வரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சாமுண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழே ஜெய்சங்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி உயிரிழந்த வேதனையில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை.. கூட இருந்த நண்பனே செய்த பயங்கரம்.. வெளியான பகீர் காரணம்.!

click me!