Diwali: சென்னை விமான நிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகள்; டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு!!

By vinoth kumar  |  First Published Oct 22, 2022, 9:57 AM IST

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் விமானங்களில் செல்வதால், சென்னை விமானநிலையத்திம் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.


தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் விமானங்களில் செல்வதால், சென்னை விமானநிலையத்திம் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில், பயணிகள் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை தீபாவளி வருகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை வருவதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் ஒட்டு மொத்தமாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, தீபாவளியை கொண்டாடுவதற்காக புறப்பட்டு செல்கின்றனா். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. குடித்துவிட்டு ஓட்டினாலும் ஆப்பு தான்..!

undefined

இதையடுத்து சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இறுதி நேரத்தில் பயணிகள் பலா், விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு  புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது, 50 ஆயிரத்தை கடந்துள்ளது.  

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிதத்தை அடுத்து, விமானங்களின் பயண கட்டணமும், பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளியை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால், சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்கின்றனர். இதனால், வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளன.

சென்னை டெல்லி இடையே வழக்கமான  கட்டணம் ரூ 6,000 ஆனால், தற்போது ரூ.12,000 முதல் ரூ18,000 வரை அதிகரித்துள்ளது. சென்னை கொல்கத்தா இடையிலான வழக்கமான  கட்டணம் ரூ. 6,500. தற்போது ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, புவனேஸ்வர் இடையிலான வழக்கமான  கட்டணம் ரூ.6,000. ஆனால், தற்போது ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, கொச்சி  வழக்கமான  கட்டணம் ரூ. 3,500.  தற்போது ரூ.9,000 ஆக அதிகரித்துள்ளது, சென்னை, திருவனந்தபுரம்  வழக்கமான  கட்டணம் ரூ. 5,000. தற்போது ரூ. 12,000 முதல் 21,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை - மதுரை இடையிலான  வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000 ஆகவும்,  சென்னை திருச்சி வழக்கமான கட்டணம்  ரூ. 3,500, இது தற்போது ரூ.11,500 ஆகவும், சென்னை, தூத்துக்குடி இடையிலான வழக்கமான கட்டணம் ரூ.4,500, ஆனால், இது தற்போது ரூ.9,500 - ரூ.11,500 வரையும், சென்னை, கோவை  வழக்கமான கட்டணம் ரூ. 3,500, ஆனால், இது தற்போது ரூ.11,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.  இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். முதலில் குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விடும். அதிக கட்டணம் டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் வழங்கும் நிலை உள்ளது. பயணிகளும் கட்டணத்தை பொருட்படுத்தாமல் பயணிக்கின்றனா். அதிக கட்டணம் கொடுப்பதை தவிா்க்க, பயணிகள்  முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருக்கலாம்'' என்றனர்.

இதையும் படிங்க;-  நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

click me!