குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியீடு.. எப்போது தெரியுமா..? வெளியான தகவல்

Published : Oct 22, 2022, 01:24 PM IST
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியீடு.. எப்போது தெரியுமா..? வெளியான தகவல்

சுருக்கம்

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   

தமிழக அரசின் அமைச்சங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,413 பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 

மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..

குரூப் 2 தேர்வை 9.94 லட்சம் பேரும் குரூப் 4 தேர்வை 18.50 பேரும் எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காலதாமதமானதால் முடிவுகள் வர தாமதம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க:தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

PREV
click me!

Recommended Stories

கூட்டமும் இல்ல.. செலவும் இல்ல.. யாரும் சொல்லாத 5 மினி ஊட்டி! குறைந்த செலவில் குடும்பத்துடன் ஜாலியா போக சூப்பர் சம்மர் பிளான்!
மே 4-ல் வானிலை டோட்டலா மாறுது.. சூரியனுக்கு 'டாட்டா'.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?