Rojgar mela 2022: சென்னையில் நிர்மலா சீதாராமனும், கொச்சினில் ராஜூவ் சந்திரசேகரும் பணி ஆணைகளை வழங்கினர்..

Published : Oct 22, 2022, 12:38 PM ISTUpdated : Oct 22, 2022, 12:58 PM IST
Rojgar mela 2022: சென்னையில் நிர்மலா சீதாராமனும், கொச்சினில் ராஜூவ் சந்திரசேகரும் பணி ஆணைகளை வழங்கினர்..

சுருக்கம்

ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த நிலையில், தமிழகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கேரளாவில் மத்திய இணையமைச்சர் ராஜூவ் சந்திரசேகரும் கலந்துக்கொண்டு பணி ஆணைகளை வழங்கினர்.  

நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை காணொலியில் பிரதமர் மோடி  தொடக்கி வைத்தார். அதில் இன்று முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. 

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சுமார் 20,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். வீடியோ காணொளி மூலமாக பிரதமர் பணி ஆணையை பெற்றவர்களிடம் உரையாற்றினார். 

 

மேலும் படிக்க:மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப தடை.. இனி மத்திய அரசு கட்டுப்பாடில் அரசு கேபிள், கல்வித் தொலைகாட்சி

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையில் நியமன நடைமுறை தொடக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

சென்னையில் அயானவரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த திட்டத்தின் கீழ் அரசு பணியின் இணைந்தவர்கள், காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் படிக்க:10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை.. மாஸ் காட்டும் மோடி.

மேலும் கேரளா மாநிலம் கொச்சின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் கலந்துக்கொண்டு, பணி ஆணைகளை வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!