மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மதுரை உட்பட 23 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த 2019ல் மதுரை மாவட்டம் தோப்பூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மோடி நாட்டினார். ஆனால் தற்போது வரையிலும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவிப்பு வெளியாகி ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை மருத்துவமனை அமைப்பதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: சொந்த நாட்டு மீனவனையே சுடுது.. இந்திய கடற்படையினரை பிடித்து ஜெயில்ல போடுங்க.. தலையில் அடித்துக் கதறும் சீமான்
தற்போது அந்த மருத்துவமனை அமைப்பதற்கான எந்த உறுதியான தகவலையும் கூறாமல் மத்திய அரசை மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில்தான் தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளைப் பார்வையிடும் நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1977.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் அமைய உள்ளது, 82 விழுக்காடு தொகையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்க உள்ளது. மீதித் தொகையை மத்திய அரசு வழங்கும், ஆனால் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது, அது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை என பதில் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடைந்து அது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும், மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: Rojgar Mela 2022: 10 லட்சம் பேருக்கு வேலை! ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மதுரையில் உள்ள நியுரோ கேர் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் நாகராஜ் வெங்கட்ராமன் அவர்கள் மதுரை AIIMS மருத்துவமனையில் தலைவராக நியமிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.