அரசு திட்டங்கள் & ரயில் பெயர்களை தமிழில் அறிவிக்கக் கோரிய வழக்கு! - தமிழ்நாடு முதன்மை செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் தான் பெயர் வைக்கப்படுகிறது.
அந்த திட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள்.
உதாரணமாக பிரதான் மந்திரி முந்த்ரா யோஜனா. இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. தமிழில் எழுதி உள்ளதால் இந்தி மொழி மட்டும் அறிந்தவர்களும் படிக்க இயலாது. அதே போல் LIC நிறுவனம் பாலிசிகளுக்கு இந்திப் பெயர்களைத் தான் வைக்கிறார்கள்.
திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் செய்வதை ஏற்க கூடாது. உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி.
மேலும் முன்பு ரயில்கள் வைகை, பல்லவன், பாண்டியன், பொதிகை என்று பெயர் வைத்தனர். தற்போது அந்தோதையா, தேஜஸ், டோரன்டோ மற்றும் சுவேதா எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, தமிழ் நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் மற்றும் எதிர் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களை தமிழ் மொழியில் மொழிப் பெயர்த்து அறிவிக்கவும், மேலும் ரயில்களுக்கும் முன்பு போல் தமிழ் பெயர்கள் வைக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
புதுவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாடத்தை ரத்து செய்ய வேண்டும் - நாராயணசாமி!!
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு முதன்மை செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.