Tamil Nadu Rain : நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பரவலாக பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு சரியான நேரத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில், தினமும் காலை நேரங்களில் அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை நேரங்களில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்து வருவது மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாகவும், அந்த மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே அங்குள்ள மக்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதவி ஏற்புக்கு சைக்கிளில் வந்த நெல்லை மேயர்; தாயாருடன் செங்கோலை பெற்ற சூவாரசியம்
அதேபோல நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ம் தேதி திங்கட்கிழமை திண்டுக்கல், நீலகிரி, தேனி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமானது முதல், இடியுடன் கூடிய அதிக கனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 5 முதல் 6 நாட்களுக்கு கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னா வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீச அதிக வாய்ப்புகள் இருப்பதால், மீனவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் மேலே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்றும் ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.
நெல்லை - செங்கல்பட்டு, தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு