திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் இன்று சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக் கொண்டார்.
மொத்தமாக 55 உறுபினர்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் 51 உறுப்பினர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களில் சுமார் 40 உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மேயருக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்ட அவரது மனைவி, பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்கு பதிவு
ஆனாலும் மேயருக்கு எதிரான கவுன்சிலர்களின் அதிருப்தி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இதனையடுத்து மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணனை முன்னிருத்தியது திமுக. கடந்த 5ம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில் 30 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜை ராமகிருஷ்ணன் தோற்கடித்தார்.
சிலை கடத்தல் கும்பலுடன் கூட்டு? ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை
இதனையடுத்து புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். முன்னதாக சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த ராமகிருஷ்ணனை திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மாலை, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட ராமகிருஷ்ணன் தனது தயாருடன் சேர்ந்து செங்கோலை பெற்றுக் கொண்டார்.