திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனை சக மாணவனே கத்தியால் தாக்கி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே இந்திய கடற்படை வளாகம் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மூலைக்கரை பட்டியைச் சேர்ந்த மாணவன் எடுத்து வந்த தண்ணீர் சிந்தியதில் தவறுதலாக அது நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் மீது பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்படவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாக சொல்லப்படுகிறது.
நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் - இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்
இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை பள்ளி வழக்கம்போல் செயல்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன், தனது வீட்டில் இருந்து விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கதிர் அரிவாளை எடுத்து வந்து மூலைகரைப்பட்டி மாணவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளான்.
இதனை பார்த்த அருகில் இருந்த மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் தாக்குதலில் காயமடைந்த மாணவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.1,500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் மாணவன் அரிவாளை எடுத்து வந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.