Nainar Nagendran: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் ஆஜர்

By Velmurugan sFirst Published Jul 16, 2024, 12:39 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நேரத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது

Latest Videos

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கனவே பாஜக நிர்வாகிகளான கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வரிசையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக முதன் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tambaram Railway Announcement : ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. முக்கிய ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!

சிபிசிஐடி அழைப்பாணையை ஏற்று நயினார் நாகேந்திரன் இன்று முதல் முறையாக அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். இதனால் சிபிசிஐடி அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

click me!