Suicide: நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

Published : Jul 11, 2024, 10:51 AM IST
Suicide: நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

சுருக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை, மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்த தர்மபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ் (வயது 41). கட்டுமானப் பணி செய்து வந்தார். இவரது மனைவி உமா (37). இவர்களுக்கு ராஜன் எபநேசர் (14), காவ்யா (10) என 1 மகனும், 1 மகளும் இருந்தனர். பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இதனிடையே குடும்ப தலைவி உமா குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி கடந்த சில தினங்களுக்கு முன் ஓமன் நாட்டிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தகள் இருவரையும் திருச்சியில் உள்ள தனது தாயிடம் ஒப்படைக்குமாறு சொல்லி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தலைவர்கள் இடையே முற்றும் வார்த்தை போர்; ஆட்டு குட்டியின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

குடும்பத்தில் நிலவிய அசாதாரண நிலையால் மனம் உடைந்த ரமேஷ், ராஜன் எபநேசர், காவ்யா என மூவரும் விஷம் அருந்தியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமை காலை இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்பாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனாலும், கதவு திறக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பணகுடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மூவரது மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுபபி வைத்தனர். 

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.. குற்றாலத்தில் தட்டி தூக்கிய போலீஸ்- காரணம் என்ன தெரியுமா.?

குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூட்டாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.