Manjolai Estate: தேயிலை தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம்; கிருஷ்ணசாமியின் எண்ட்ரியால் வழக்கில் திடீர் திருப்பம்

By Velmurugan sFirst Published Jul 8, 2024, 4:55 PM IST
Highlights

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக இருப்பதாக பிபிடிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், இது தனிப்பட்ட தனியார் நிறுவனத்துக்கும், மக்களுக்கும் இடையேயான பிரச்சினை என்று வாதிடப்பட்டுள்ளது.

2 மகள்கள், மனைவியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்? கோவையில் பரபரப்பு சம்பவம்

Latest Videos

இந்த நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாய் கண் முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட ரௌடி; திண்டுக்கல்லில் கொலைக்கு பழி தீர்த்த மர்ம கும்பல்

மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிற்கு இன்று ஆஜராகிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நானே நேரில் ஆஜராகி மாஞ்சோலை பகுதியிலேயே அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என தெரிவித்தார்.

click me!