- Home
- Gallery
- Tambaram Railway Announcement : ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. முக்கிய ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!
Tambaram Railway Announcement : ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. முக்கிய ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!
Tambaram Railway Announcement : ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக தாம்பரம் - நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா விரைவு ரயில் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tambaram Railway Station
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் - நாகர்கோவில் இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவது மட்டுமல்ல மாற்று பாதையிலும் இயக்கப்படுகிறது.
Antyodaya Train Cancelled
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஆகையால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Southern Railway
ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகானிரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (22632) சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூரில் நிறுத்தப்படும். ஜூலை 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் (மண்டபம்) இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் (22535) ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் ( 22613) ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
Pallavan Train
ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில்(12606) மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684) ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாமரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் ( 20683) விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
Trains Cancellation
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.