பயணிகளின் கூட்ட நெறிசலை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு 11ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்
இதே போன்று நாகர்கோவில் - தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 18, 25 தேதிகளில் இரவு 11.15 மணிக்கு ரயில் புறப்படும்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்ட அவரது மனைவி, பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்கு பதிவு
மறு மார்க்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 19, 26 ஆகிய தேதிகளில் பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயி்ல்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவும் 11ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.