நீயா, நானா பார்த்துவிடுவோம்! நான் தான் தலைவர்- அன்புமணிக்கு இறுதி சான்ஸ் கொடுத்த ராமதாஸ்

Published : Jun 12, 2025, 01:02 PM ISTUpdated : Jun 12, 2025, 01:49 PM IST
ANBUMANI AND RAMADOSS

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே கடும் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ராமதாஸ் அன்புமணிக்கு இடையே முற்றும் மோதல் : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களப்பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், உட்கட்சி மோதல் பாமகவில் அதிகரித்துள்ளது. தந்தை மகனுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இரண்டு பிரிவாக பாமக உள்ளது. இதனையடுத்து ராமதாஸ்- அன்புமணியை சமாதானம் செய்யும் முயற்சியை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டனர். ஆனால் எந்த வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இரண்டு ஆளுமைகளின் சமரச பேச்சு டிராவில் முடிந்துவிட்டது. எல்லாம் எனக்கே வேணும் என எண்ணி என்னை கேட்டை சாத்திக்கொண்டு உள்ளவே இருக்க வேண்டும் எண்ணுகிறார் நான் அப்படி இருக்கமாட்டேன். பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி தயாராக இல்லை. உழைப்பதற்கு தயாராக இல்லாத அன்புமணி, கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பதேயே நோக்கமாக கொண்டிருக்கிறார்.

கேட்டை சாத்திக்கொண்டு உள்ளவே இருக்க வேண்டும் எண்ணுகிறார்

ஒவ்வொரு செங்கல் கற்களாக பார்த்து பார்த்து கட்டிய பாட்டாளி மக்கள் கட்சியில் நான் குடியமைத்தவரை எதிராக செயல்படுகிறார். நான் கூட்டிய மாவட்ட செயலாளர் கூட்டத்தை பொய்யான தகவலை சொல்லி மாவட்ட செயலாளர்கள்களை பங்கேற்காதபடி செய்தார் அன்புமணி. குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம் ஆனால் தந்தையை மீறிய தமையன் இருக்க கூடாது என தெரிவித்தார்.

ஆறு வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் தில்லியில் மோடியை சந்திக்க சென்ற போது விமானத்தில் அன்புமணி நான் தலைவர் ஆக விருப்பபடிகிறேன் என தெரிவித்தார். அப்போது நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். அன்புமணிக்கு அப்போதே அந்த ஆசை இருந்தது. என் குடும்பத்தை சார்ந்த பெண்கள் அரசியலில் வர கூடாது என நான் தெரிவித்தேன். இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். அவர் கட்சியை அவர் சரியாக வழி நடத்தவில்லை. கட்சி வலுவாக இருந்தால் தான் கூட்டணியில் அதிக இடங்களை கேட்க முடியும் என்றேன். 

நான் தான் தலைவராக செயல்படுவேன்- ராமதாஸ்

இந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அவர் அனைத்தையும் வங்கி செல்லட்டும். அதுவரை நானே தலைவராக செயல்படுவேன். முன்பு யாரையும் சந்திக்க மாட்டார் இப்போது பிரியாணி போட்டு கூவி கூவி தொலைபேசியில் அழைக்கிறார். என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார். என்னை நடைப்பிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணம் செல்ல இருப்பதாக நாடகமாடுகிறார் அன்புமணி. இந்த மோதல் போக்கில் காரணமாக அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன். பாட்டாளி மக்கள் கட்சியில் கூட்டணி வைக்க விரும்புபவர்களுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்பது தெரியும். சட்டமன்ற தேர்தலில் பாமகவின் கூட்டணி குறித்து நானே முடிவெடுப்பேன். கட்சி தொண்டர்கள் எல்லாம் என் பக்கம். காந்தி போல நான் முடிந்தவரை கோல் ஊன்றி சென்றாலும் இந்த ஊமை மக்களுக்காக நான் பாடுபடுவேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!