RajiniKanth : மோடியின் சாதனையே 3 வது முறையாக பிரதமராகியுள்ளார்.! பதவியேற்பு விழாவிற்கு புறப்பட்ட ரஜினிகாந்த்

By Ajmal Khan  |  First Published Jun 9, 2024, 10:10 AM IST

இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி இன்று மாலை பங்கேற்கவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டு சென்றார். 3வது முறை பிரதமர் என்புத மோடியின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என கூறினார்.  
 


3வது முறையாக வெற்றி

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் யாரும் இது பார்க்காதவகையில்,  பல்வேறு திருப்பங்களை இந்த தேர்தல் சந்தித்துள்ளது. அந்த வகையில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என கூறி வந்த பாஜக பெரும்பான்மைக்கு தேவையான  இடங்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து மற்ற கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைக்க உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரியிலிருந்து நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

 இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியின் அமைப்பதற்கான உரிமையை கோரினார்.  இன்று மாலை 7:30 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Annamalai vs BJP: ஆணவம், திமிரால் சொந்த ஊரிலேயே அண்ணாமலை பெற்ற வாக்குகளை இது தான்.!!மீண்டும் சீறிய கல்யாணராமன்

சாதனைக்கு கிடைத்த வெற்றி

அப்போது புதிய அமைச்சரவையும் இன்று பதிவு ஏற்க உள்ளது.  அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள இரண்டு பேர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர் சந்திரசேகர் மற்றும் ராம் மோகன் நாயுடு இருவரும் மத்திய அமைச்சரவைக்குத் தேர்வாகியுள்ளனர். இதே போல கூட்டணி கட்சி எம்பிக்களும் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கு கொள்வதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.  இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்று மாலை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும் மூன்றாவது முறை வெற்றி என்பது மோடியின் சாதனை என குறிப்பிட்டார். மேலும் மக்கள் வலுவான எதிர்கட்சியை தேர்ந்தெடுத்திருகிறார்கள். இது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறி என கூறினார்.

மத்திய அமைச்சராகும் தெலுங்கு தேசம் கட்சி கோடீஸ்வர எம்.பி.! ரெண்டு பேரை ஓகே செய்த சந்திரபாபு நாயுடு!

click me!