கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!

Published : Jun 09, 2024, 09:06 AM ISTUpdated : Jun 09, 2024, 09:18 AM IST
கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!

சுருக்கம்

தனி ஒரு வீராங்கனையாக விவசாயிகள் பக்கம் நின்று துணிவோடு எதிர்வினை ஆற்றிய குல்விந்தர் கவுருக்கு தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகி இருக்கிறார். இவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் குல்விந்தர் கவுர், அவரை கன்னத்தில் அறைந்தார்.

கங்கனாவின் கன்னம் பழுக்க பளார் என்று விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியதால் தான் அவரை அடித்ததாக கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொளுத்திப் போட்ட தமிழிசை! அண்ணாமலைக்கு ஆப்பு எப்போ? ரவுண்டு கட்டி அடிக்கும் மூத்த பாஜக நிர்வாகிகள்!

பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தன்னுடைய தாயும் கலந்துகொண்டிருக்கிறார் என்றும் கங்கனா போராட்டம் நடத்துபவர்களை தீவிரவாதி என்று சொல்கிறார்; அதனால்தான் அறைந்தேன் என்றும் குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார். ஆனால், இந்தச் சம்பவத்தின் விளைவாக அவர் மீது நடவடிக்கை எடுக்ப்பபட்டு, வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெண் காவலர் குல்விந்தர் கவுரின் தாயார் விவசாயிகளின் உரிமைக்காகவும் மாநில நலனுக்காகவும் போராடியவர் என்று கூறி பாராட்டியுள்ளது. தனி ஒரு வீராங்கனையாக விவசாயிகள் பக்கம் நின்று துணிவோடு எதிர்வினை ஆற்றிய குல்விந்தர் கவுருக்கு தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக கங்கனாவுக்கு ஆதரவாகவும், பெண் காவலருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், பஞ்சாப் விவசாயிகள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குல்விந்தர் கவுருக்கு ஆதரவு அளித்துள்ள இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி, அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த கான்ஸ்டபிளுக்கு வேலை! கேரண்டி கொடுத்த பாடகர் விஷால் தத்லானி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!