மழை பாதிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் 5வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிப்பு

By SG Balan  |  First Published Dec 21, 2023, 7:09 PM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 5வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், தூத்துக்குடியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஐந்தாவது நாளாக நாளையும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நெல்லையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 8 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிப்பது பற்றி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள் என்றும் மழையில் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தால் அது குறித்த விவரத்தை தலைமை ஆசிரியரிடம் பதிவுசெய்யலாம் என்றும் நெல்லை கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பினால் தடைபட்டிருந்த ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் வழித்தடத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாக்கெட் வழக்கு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

click me!