கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் அனுமதியா..? அறநிலையத்துறையின் முடிவு..?

By manimegalai aFirst Published Oct 2, 2021, 8:52 AM IST
Highlights

புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களை அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சென்னை: புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களை அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புரட்டாசி மாதம் தற்போது நடந்து வரும் நிலையில், கோயில்களில் சனிக்கிழமை தோறும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் தருணத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிலில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்து சமய வழிபாட்டில் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் சனிக்கிழமை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட விசாரணையையும் தள்ளி வைத்தது.

click me!