டெங்கு - சிக்குன்குனியாவை தடுக்கும் புதிய கொசு...! புதுச்சேரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தல்

By Ajmal KhanFirst Published Jul 7, 2022, 10:47 AM IST
Highlights

டெங்கு, சிக்கன்குனியாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை கொசுவை கண்டறிந்து புதுவை விஞ்ஞானிகள் அசத்தியுள்ளது.

புதிய வகை வைரஸ்-மக்கள் அச்சம்

உலக மக்களை புதிய, புதிய வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்தவகையில், கொரோனா பாதிப்புக்கு முன்னதாக டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நோயில் இருந்து மக்களை விடுவிக்க புதிய வகை ஆராய்ச்சியில் புதுவை பூச்சி கட்டுப்பாட்டுத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில்,  டெங்கு, சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த பெண் கொசுக்கள் ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் போது வைரஸ்களை சுமக்காத லார்வாக்களை உருவாக்குவதாக தெரிகிறது. இதனால் கொசு மூலம் டெங்கு, சிக்கன்குன்யா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொசுக்களை ஒவ்வொரு பகுதியாக விடுவித்து பரவ விட மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3 ஆயிரத்தை நெருங்கிறது தினசரி கொரோனா… சென்னையில் 1,062 பேருக்கு தொற்று!!

மெட்ரோ ரயிலில் செல்பவர்களா நீங்கள்? அப்படினா இன்று முதல் இது கட்டாயம்..!

டெங்கு வைரஸ் கட்டுப்படுத்த புதிய வைரஸ்

பருவ மழை காலத்தில் இந்த நோய்களின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க தற்போது புதிய வகை கொசு கண்டறிந்தது பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளனர். இந்த கொசுவின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்த புதுவை பூச்சி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய அதிகாரி அஸ்வனி குமார் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் வோல்பாச்சியா என்ற புதிய வகை பெண் கொசுவுடன் ஆண் கொசுக்களை இனபெருக்கத்திற்கு விட உள்ளதாகவும் இதன் மூலமாக வைரஸ் இல்லாத கொசுக்கள் உருவாகும் என தெரிவித்தார். தற்பொழுது கொசுக்களை கண்டுபிடிக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில் மத்திய மாநில ஒப்புதல் அளித்ததும் பிறகு பொதுவெளியில் இந்த கொசுக்களை பறக்க விட இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக டெங்கு, சிக்கன் குன்யா நோய்கள் கட்டுப்படுத்தப்படும் என கூறினார்.

இதையும் படியுங்கள்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை


 

click me!