ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை

By Ajmal Khan  |  First Published Jul 7, 2022, 9:10 AM IST

மூலிகை பெட்ரோல் தயாரிப்பு தொடர்பான வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
 


மூலிகை பெட்ரோல்- நீதிமன்றம் உத்தரவு

25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தவர் ராமர்பிள்ளை, இவர் பெயர் தெரியாதவர்கள் இருந்ததில்லை, அந்தவகையில் தான் மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாக கூறி நாட்டையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 25 வருட போராட்டத்திற்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தனது மூலிகை பெட்ரோல் தயாரிப்புக்கு எதிரான வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். என் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய சிபிஐயால், மூலிகை பெட்ரோலுக்கு  எதிராக போதிய ஆதாரத்தை நிரூபிக்க முடியவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் என்னிடம் இருந்து கைப்பற்றிய பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு - எங்கு தெரியுமா?

பட்டாசு வெடிக்க தடை..மீறினால் அபராதம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு

ரூ.16க்கு பெட்ரோல்.?

பத்தாம் வகுப்பு படித்த சாதாரண கிராமத்து சாமானியனிடம் சிபிஐ அதிகாரிகள் தோற்று போய் இருப்பதாகவும் கூறினார். தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிபிஐ அதிகாரிகளான முகர்ஜி. கதிரேசன் ஆகியோர்தான் காரணம் எனவும் தெரிவித்தார். இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் பேசப்படும் என்றும்,  அதற்கு தனது பெட்ரோல் கண்டுபிடிப்பு தான் காரணமாக இருக்கும் என தெரிவித்தார். தனது கண்டுபிடிப்பான பெட்ரோலை கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் மேம்படுத்தி உள்ளதாகவும் தற்போது 40 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அது வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பு தொடர்பாக தனது ரகசியங்களை தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய இருப்பதாக கூறினார். முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகன் சார்ந்த நிறுவனத்திடம் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் டீசல் 18 ரூபாய்க்கும் தனது மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படிங்கள்

38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த அதிர்ச்சி.!

 

click me!