மெட்ரோ ரயிலில் செல்பவர்களா நீங்கள்? அப்படினா இன்று முதல் இது கட்டாயம்..!

By vinoth kumar  |  First Published Jul 7, 2022, 9:50 AM IST

சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 நெருங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1062ஆக உள்ளது. ஆகையால், தொற்று பாதிப்பை குறைக்க சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நான் இருக்கும் போதே இன்னொருத்தன் கேட்குதாடீ..?? பஸ் ஸ்டாண்டில் காதலியின் தொண்டையை அறுத்த காதலன்.

undefined

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடுள்ள செய்தி குறிப்பில்;- சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க;-  அட கடவுளே... 9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!

சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை  அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

click me!