இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!

By vinoth kumar  |  First Published Jul 4, 2022, 1:34 PM IST

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு அறிவுறுத்தினர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடதத்தி பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் அனைத்தும் 23ம் தேதி நடந்த பொதுக்குழு மட்டுமே பொருந்தும். 


ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. 

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைச்சாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

undefined

அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும், தீர்மானம் நிறைவேற்றியவர்களை தண்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அவைத் தலைவர் கூட்ட முடியாது என கூறப்பட்டது.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு அறிவுறுத்தினர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடதத்தி பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் அனைத்தும் 23ம் தேதி நடந்த பொதுக்குழு மட்டுமே பொருந்தும். வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

click me!