சுனா.சாமியை கண்டித்து இந்து அமைப்பு பாஜக அலுவலகம் முற்றுகை

First Published Jan 13, 2017, 4:35 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சை படுத்தும் சுனா.சாமியை கண்டித்து இந்து சத்திய சேனா அமைப்பினர் தி.நகர் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர் 

இது பற்றி அந்த அமைப்பினர் அறிக்கை: 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும்இரண்டே நாட்கள் உள்ள நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தும் போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் உரிமை சார்ந்த விஷயமாக ஜல்லிக்கட்டு விவகாரம் பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் நடக்கும் என தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரைக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஏதாவது அதிசயங்கள் நடந்தால்தான் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியப்படுவதுபோல் தெரிகிறது. 

இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர் போனவருமான சுப்ரமணிய சாமி, ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். 

அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில். “உச்சநீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால், அது சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று பொருள்படும். அவ்வாறு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

    சுப்ரமணிய சாமியே

 அகில இந்திய இந்து சத்திய சேனா சாா்பாக

 வண்மையாக கண்டிக்கிறோம்

                     இப்படிக்கு

                     R .லோகேஷ்

        செய்திதொடர்பாளா் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்து அமைப்பே பாஜக அலுவலகத்தை முற்றுகை இடுவது பர பரப்பாக பார்க்க படுகிறது.    

click me!