வெளி மாநில பெண்களை வைத்து விபச்சாரம்; ஸ்வைப் மிஷின் வைத்து டிஜிட்டல் முறையில் பணம் வசூல்...

First Published May 14, 2018, 9:17 AM IST
Highlights
Prostitution with other state women money collect with Swipe Machine


மதுரை

வெளி மாநில பெண்களை வைத்து மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்துவந்த தம்பதி உள்பட மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்தனர். ஸ்வைப் மிஷின் வைத்து டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் பாலா. இவர் அண்ணாநகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இதில், மாடக்குளத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன் (32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவை சேர்ந்த சனூப் (23) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். 

இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக அண்ணாநகர் காவலாளர்களுக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஏட்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவலாளர்கள் அங்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையில் மஜாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. காவலாளர்கள் வருவதை எப்படியோ தெரிந்து கொண்ட மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

இதனைத் தொடர்ந்து விபசாரம் செய்ய உதவியாக இருந்த அழகேஸ்வரன், பவித்ரா, சனூப் ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், விபசாரத்திற்கு அழைத்து வந்த மூன்று அழகிகளையும் மீட்டனர்.

இதுகுறித்து காவலாளர்கள் தரப்பில் கூறப்பட்டவை; "வெளி மாநிலங்களில் இருக்கும் பெண்களை அதிக பணம் தருவதாக கூறி அழைத்து வந்து இங்கு விபச்சாரம் செய்கின்றனர்.

தற்போது மீட்கப்பட்ட மூன்று பெண்களும் கொல்கத்தா, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த மசாஜ் சென்டரில் இருந்து, பணம் எடுக்க பயன்படுத்தும் ஸ்வைப் மிஷின், ரூ.5000, மூன்று செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். 

இதில் ஏ.டி.எம். கார்டு வைத்துள்ளவர்களிடம் விபச்சாரத்திற்காக பணம் பெறுவதற்கு வசதியாக ஸ்வைப் மிஷினை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலாவை தேடி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தனர். 

click me!