பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா

By Velmurugan s  |  First Published Apr 8, 2024, 2:24 PM IST

"கேப்டன் விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை, நம்முடன் தான் இருக்கின்றார்" என தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார்.


நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிவக்கொழுந்துவின் குரல் டெல்லியில் மக்களுக்காக ஒலிக்க போகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று பேரும் மனிதர்களாக பிறந்த தெய்வங்கள். 

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Tap to resize

Latest Videos

அதிமுக, தேமுதிக இன்று மக்கள் விரும்பும் கூட்டணியாகவும், நாளை சரித்திரம் படைக்கும் கூட்டணியாகவும் இருக்கும். தேர்தல்  வாக்குறுதியாக விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை விரைந்து முடிக்கப்படும், புதிய பல்கலைக்கழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் வீடே எடுத்து தங்கினாலும் ஒரு சீட்டு கூட தேராது - அமைச்சர் உதயநிதி சவால்

தொடர்ந்து மக்களுக்காக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஆட்சி பலமும், பணபலமும் கொண்டு மச்சானும், பச்சானும் வந்தாலும் இங்கு அவர்கள் பாச்சா பலிக்காது. திருமணத்திற்கு பின்னர் முதல் முதலாக கேப்டனுடன் நான் இடம் பண்ருட்டி. ஆனால் நான் இன்று தனியாக வந்துள்ளேன். கேப்டன் எங்கும் செல்லவில்லை, நம்முடன் தான் இருக்கின்றார் என பேசிக்கொண்டே கண் கலங்கினார். அப்போது கூட்டத்தினரும் கண் கலங்கிய நிலையில் தன்னை தேற்றிக்கொண்டு பரப்புரையை தொடர்ந்தார்.

click me!