நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

By Velmurugan s  |  First Published Apr 8, 2024, 1:41 PM IST

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தலைஞாயிறு அடுத்த வாட்டாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(வயது 60). ஈயம் பூசும் தொழில் செய்யும் சேகர் தலைஞாயிறு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர். இவருக்கு 2 மகன்கள் இருந்த நிலையில், அவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சபரீஷ் மற்றும் அருள்ராஜா ஆகியோர் நீரில் மூழ்கியும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

ADMK : தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு வந்த சோக செய்தி.. மாஜி எம்எல்ஏ மறைவு- அதிமுகவினர் அதிர்ச்சி

Latest Videos

undefined

இந்நிலையில் இவரது மனைவி குமுதம்(56) கடந்த மாதம் உயிரிழந்தார். மனைவியின் துக்கநிகழ்வில்கூட பங்கேற்காத கணவர் சேகர் தனது மாற்று திறனாளி மகள் சிவகாமசுந்தரியை வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் படிக்க வைத்துள்ளார். மேலும் குடிக்கு அடிமையாக இருந்த சேகர் யாரை பார்த்தாலும் தான் தீக்குளிக்க போகிறேன் என புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 

நிலையில் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்த அவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி ஏறிந்ததை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அனைத்து முதியவரை காப்பாற்றினர். 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்திய தருமபுரம் ஆதீனம்

ஆனால் 80 சதவீத தீக்காயங்களுடன் முதியவர் முழுவதும் எரிந்ததால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார், அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!