கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதிமுக சார்பாக அடுத்தடுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
விஷச்சாராய மரணம்
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிகழ்வு மறைவதற்க்குள் அடுத்ததாக 61 பேரின் உயிரை பழிவாங்கியுள்ளது கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம். இந்த சம்பவத்தையடுத்து கள்ளச்சாராய மரணத்தை தடுக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனைஅமைத்தது தமிழக அரசு, மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக சிபிஐ விசாரணை தேவை, 61 பேரின் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசோ முடியவே முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
சூப்பர் அறிவிப்பு..! ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
அதிமுகவின் தொடர் போராட்டங்கள்
இதனையடுத்து அதிமுக சார்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சட்டமன்றத்தில் அமளி, தமிழகம் முழுவதும் போராட்டம், ஆளுநரிடம் புகார்,நீதிமன்றத்தில் வழக்கு என விஷ்வரூபம் எடுத்த அதிமுக தற்போது உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. சென்னை ராஜரத்தினம் அரங்கத்தின் அருகே உண்ணாவிரத போராட்டத்தை இபிஎஸ் தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
தேமுதிக ஆதரவு
இந்த நிலையில், அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து போராட்டத்திற்கு தேமுதிகவும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுகவிற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Khushbu : என் வாழ்நாளில் மதுவை தொட்டதே இல்லை.. Black wine குடித்ததாக கூறிய புகாருக்கு குஷ்பு பதிலடி