பாஜக வெற்றி.! இந்தியா கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கை- அலர்ட் செய்யும் பொன்முடி

Published : Feb 09, 2025, 08:23 AM IST
பாஜக வெற்றி.! இந்தியா கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கை- அலர்ட் செய்யும் பொன்முடி

சுருக்கம்

தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். டெல்லி தேர்தல் தோல்வி இந்தியா கூட்டணிக்கு பாடம் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் பாஜக வெற்றி

இந்தியாவில் 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை அமைக்க தீவிரமாக உழைத்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல கை மேல் பலன் கிடைத்துள்ளது. அடுத்ததாக தென் மாநிலங்களை பாஜக குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி இழந்துள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ்- ஆம் ஆத்மி தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் ஈரோடு தேர்தல் திமுக வெற்றி தொடர்பாக திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொதுச்செயலாளரும், அமைச்சருமான பொன்முடி,

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் வெற்றி! நாதகவுக்கு டெபாசிட் போச்சு!


 
தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி

தமிழகத்தில் திமுக 2026 தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக  234 தொகுதிகளிலேயும் திமுல தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை ஈரோடு தேர்தல் நிரூபித்து இருப்பதாகவும்  கூறினார். ஈரோடு தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டவர் டெபாசிட்டையும் இழந்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி சீமான் பெரியார் குறித்து பேசினது பாஜக வாக்கினை வாங்குவதற்காக தான் என்றும் அது ஈரோடு தேர்தலில் நிரூபனமாகியுள்ளது என தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலில் ஈ வி கே எஸ் இளங்கோவன் வாங்கிய வாக்குகளை விட அதிகமாக திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாங்கியிருப்பதாகவும் ஈரோடு தேர்தலில் கிடைத்த  மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என கூறினார். 

டெல்லி தேர்தல் 2025: படுதோல்விக்கு வழிவகுத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் 5 தவறுகள்!

இந்தியா கூட்டணிக்கு எச்சரிக்கை

பெரியார் குறித்து பேசியதால்  நாம்தமிழர் கட்சியினர் டெபாசிட் இழந்திருப்பதாகவும் பெரியார் இன்றி தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என தெரிவித்தார். டெல்லி தேர்தல் இந்தியா கூட்டணிக்கு பாடமாகவும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.  இனிமேல் இதுபோன்று பிளவுப்படாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த டெல்லி தேர்தல் அமைந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்