
நெல்லையில் உள்ள புகழ்பெற்ற அல்வா கடையான இருட்டுக்கடையின் உரிமையாளர் உரிமையாளர் சுலோச்சனா பாய் காலமானார். 87 வயதான இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
திருநெல்வேலி அல்வாவுக்கு பிரபலமானது. அதிலும் குறிப்பாக நெல்லை டவுன் பகுதியில் உள்ள இருட்டுக் கடை மிகவும் புகழ்பெற்றது. நெல்லையப்பர் கோயில் முன்பு அமைந்துள்ள இருட்டுக்கடை 1900ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிந்துகொண்டிருக்கும் என்பதால் இதற்கு 'இருட்டுக் கடை' என்று பெயர் வந்தது.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் வெற்றி! நாதகவுக்கு டெபாசிட் போச்சு!
ராஜஸ்தானில் இருந்து வந்த பிஜிலி சிங் குடும்பத்தினர் இந்தக் கடையைத் தொடங்கினர். இப்போது அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினர் இருட்டுக் கடையை நடத்தி வருகிறார்கள். இந்தக் கடையின் உரிமையாளராக இருந்தவர் ஹரி சிங் 2020ஆம் ஆண்டு கோரானா தொற்றின்போது தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
அண்மையில் நெல்லைக்குச் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டார். அது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். "எப்போது நெல்லை வந்தாலும்... #ThirunelveliHalwa" என்று குறிப்பிட்டு இருட்டுக் கடையில் அல்வா வாங்கித் தின்னும் படங்களைப் பகிர்ந்திருந்தார். முதல்வரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், நெல்லை இருட்டுக்கடை அல்வாவின் உரிமையாளர் திருமதி சுலோச்சனா காலமானதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனாவின் மரணம் நெல்லை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்கும் பாஜக! 40 தொகுதிகளில் வெற்றி!